• Nov 14 2024

ரசிகர்களை கவர்ந்ததா சாந்தகுமார், அர்ஜுன் தாஸ் கூட்டணி? ‘ரசவாதி’ திரைவிமர்சனம்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் உருவான ‘ரசவாதி’ என்ற திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.

ஒரு வழக்கிலிருந்து தப்பிக்க தனது உயர் அதிகாரியை கொலை செய்துவிட்டு அதை மறைத்து கொடைக்கானலுக்கு மாற்றல் ஆகி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர், அதே கொடைக்கானலில் சித்த மருத்துவராக இருக்கும் அர்ஜுன் சிங் ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் மோதல் தான் இந்த படத்தின் கதை.

சொந்த பிரச்சனை காரணமாக நல்ல வேலையை விட்டுவிட்டு கொடைக்கானலுக்கு மேனேஜராக வரும் தன்யா ரவிச்சந்திரன் கேரக்டர் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பாக அர்ஜுன் தாஸ் உடன் அவர் காதலில் விழுந்த பிறகு இந்த இருவருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரால் ஏற்படும் பிரச்சனை படத்தின் கதையை விறுவிறுப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன் காதலர்களை பிரிக்க இன்ஸ்பெக்டர் உள்நோக்கம் என்ன? இந்த சிக்கலில் இருந்து இருவரும் எப்படி மீண்டார்கள் என்பதை சொல்வது தான் இந்த ‘ரசவாதி’ படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.

புறாவுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றும் இளகிய மனது கொண்ட நாயகன், தான் வீட்டில் பொறியில் சிக்கிய  எலியை கூட கொடூரமாக கொல்லும் இன்ஸ்பெக்டர் வில்லன் என இரண்டு எதிரெதிர் கேரக்டர்களை வைத்து அவர்களுக்கு இடையே இணைக்கும் ஒன் லைன் கதையை எடுத்துக்கொண்டு இயக்குனர் சாந்தகுமார் திரைக்கதை அமைத்துள்ளார்.
 
அடிப்படையில் இது ஒரு பழிவாங்கும் கதை என்றாலும் வித்தியாசமான திரைக்கதை, சரியான இடத்தில் கதைக்கு தேவையான பிளாஷ்பேக், நட்சத்திரங்களின் அளவான நடிப்பு, மிகைப்படுத்தாத பின்னணி இசை ஆகியவை படத்தின் பிளஸ் பாயிண்ட்களாகும். ஆனால் அதே நேரத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் கதை எதை நோக்கி பயணம் செய்கிறது? வில்லன் நோக்கம் என்ன என்று தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில் கதாபாத்திரங்களின் தன்மையை சரியாக பார்வையாளர்களுக்கு விளக்க வில்லை என்ற அதிருப்தியும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அர்ஜுன் தாஸ் - தன்யா காதல் காட்சிகளிலும் பெரிய அளவில் சுவாரசியம் இல்லை. படத்தின் முக்கிய சிறப்பம்சம் வில்லனாக வரும் சுஜித் சங்கரின் நடிப்பு என்பதும் சிறுவயதில் குழந்தையாக இருக்கும் போது ஏற்படும் உளவியல் பிரச்சனை காரணமாக அவர் வளர்ந்து பெரிய ஆளானவுடன் அந்த உளவியல் பிரச்சனை எந்த அளவுக்கு பிறரின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார்.

நாயகி தன்யா ரவிச்சந்திரன், ஹீரோவின் நண்பர் கேரக்டரில் வரும் ரிஷிகாந்த், விஜே ரம்யா , ஜி எம் சுந்தர் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்களை சரியாக செய்துள்ளனர். தமன் இசையில் பாடல்கள் சுமார் என்றாலும் பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்த உதவுகிறது. மொத்தத்தில் இந்த படம் வித்தியாசமான டைட்டில், அர்ஜுன் தாஸின் மிகைப்படுத்தாத நடிப்பு, சாந்தகுமாரின் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவை இருந்தாலும் ஒரு பரபரப்பான த்ரில்லராக பார்க்க முடியவில்லை என்பது ஏமாற்றமாக உள்ளது.

Advertisement

Advertisement