• Sep 20 2024

விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகியாகும் ராஷ்மிகா மந்தனா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் விக்ரம்.பாலாவின் இயக்கத்தில் அவர் நடித்த சேது படம் தான் இவரை சிறந்த நடிகனாக அறிமுகப்படுத்தியது.இப்படத்தைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்தவர்.

இவருடைய நடிப்பில் கோப்ரா பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.இந்நிலையில் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.

19வது நூற்றாண்டை மையப்படுத்திய உண்மைக்கதைகளின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட்டில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு சிறப்பான அளவில் போடப்பட்டது. அதிகமான பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட உள்ள இந்தப் படம் கேஜிஎப் கதையை மையப்படுத்தி உருவாக உள்ளதாகவும் 3டியில் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ள நிலையில், தற்போது ஹீரோயின் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. புஷ்பா மற்றும் வாரிசு படங்களை தொடர்ந்து இந்தப் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது சியானுடன் இவர் ஜோடி சேரவுள்ளதாக கூறப்படும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement