புஷ்பா படத்தில் இடம் பெற்ற சாமி சாமி பாடலுக்கு சூப்பராக நடனமாடிய சிறுமியை சந்திக்க வெண்டும் என்று டுவிட்டரில் நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் அனைத்து மொழி ரசிகர்களின் க்ரஷாக இருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியாகியிருந்த சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து நடிகர் விஜய்யுடன் இணைந்து வாரிசு என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
மேலும் இவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன என்பதும் யாவரும் அறிந்ததே.
Maaaaadddddeeeeee myyyyy daaaaaay.. I want to meet this cutie..💘
how can I? 🥹 https://t.co/RxJXWzPlsK
இந்த நிலையில் இப்பாடலுக்கு சிறுமி ஒருவர் நடனமாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து ராஷ்மிகா அந்த சிறுமையை சந்திக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த வீடியொ தற்பொழுது ட்ரெண்டாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!