அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் பிரபல பாலிவுட் நடிகை உட்பட சில நடிகைகளிடம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன், ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர் அஜித் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்து உள்ளது. இதற்கு காரணமாக விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 69’ படத்தில் ராஷ்மிகா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் தான் அஜித் படத்தை அவர் தவிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும் இது குறித்த தகவல் இணையத்தில் கசிந்து வரும் நிலையில் ராஷ்மிகா மந்தனா தரப்பினர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இப்போது வரை அஜித்தின் படத்தில் நடிக்க தன்னிடம் யாரும் அணுகவில்லை என்றும் அதேபோல் விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்க யாரும் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் மேற்கண்ட தகவல் அனைத்தும் அடிப்படை ஆதாரம் இல்லாத பொய்யான தகவல் என்றும் ராஷ்மிகா தரப்பில் இருந்து கூறப்பட்டு உள்ளது.
ஒருவேளை அஜித் மற்றும் விஜய் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் இரண்டு படங்களையும் அவர் ஒப்புக்கொள்வார் என்றும் ஆனால் அவர் நடிப்பாரா? இல்லையா? என்பதை வேண்டும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Listen News!