ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகி வரும் 'அனிமல்' படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது, இதில் ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக்கை திரைபடக்குழு வெளியிட்டுள்ளது.
அனிமல் திரைப்படத்தின் நடிகர் கபூரின் கேரக்டரின் போஸ்டரை வெளியிட்டு ஒரு நாள் கழித்து, இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் பட குழுவினர், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அனிமல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.சமூக ஊடகங்களில் இது தொடர்பான போஸ்டர்கள் படக்குழுவினால் பகிரப்பட்டுள்ளது.
நடிகை ராஷ்மிகா அனிமல் திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தின் பெயர் " கீதாஞ்சலி" என்று தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் போஸ்டரை பதிவு செய்துள்ளார். மெரூன் மற்றும் வெள்ளை நிற செக்கப் பட்டுப் புடவையில் அழகான தோற்றத்தில் புன்னகையுடன் காணப்படுகிறார். இத்திரைப்படத்தில் பாரம்பரிய பெங்காலி உடையில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் ரன்பீரின் பிறந்தநாளில் வெளியாக உள்ளது .மேலும் இத்திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!