தெலுங்கில் வெளிவந்த 'கீதா கோவிந்தம்' என்ற படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இப்படத்தில் இவருடைய க்யூட்டான நடிப்பும், குழந்தைத்தனமான சிரிப்பும், கட்டான உடலழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
இதன்முலம் தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
எனினும் தமிழில் இவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த 'சுல்தான்' என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அதுமட்டுமல்லாது தெலுங்கில் 'புஷ்பா', ஹிந்தியில் 'மிஷன் மஜ்னு' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதில் புஷ்பா படத்தில் சர்ச்சைக்குரிய வேடத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார்.
இவ்வாறாக பல படங்களிலும் பட்டையை கிளப்பி வரும் ராஷ்மிகா தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக 'வாரிசு' என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படாமானது பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றது.
இவ்வாறாக நடிப்பில் படு பிஸியாக இருந்து வரினும் நடிகை ராஷ்மிகா அவ்வப்போது தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழமை.
அந்தவகையில் தற்போது மாடர்ன் ட்ரெஸ் அணிந்து கவர்ச்சி ததும்ப புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்திருக்கின்றார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
Listen News!