• Sep 20 2024

டெல்லியின் பிரபல ஹொட்டலில் தங்கும் ராஷ்மிகா- ஒரு நாள் வாடகை மட்டும் எவ்வளவு செலுத்துகின்றார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


ராஷ்மிகா மந்தனா டெல்லியில் பிரபல ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு நாள் வாடகை மட்டும் சுமார் 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வழங்கியுள்ளாராம்.

தென்னிந்திய சினிமாவில் பான் இந்திய நடிகையாக வலம் வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர்  Kirik Party என்ற படத்தின் மூலம் கடந்த 2016ம் அண்டு மலையாள சினிமாவில் அறிமுகமாகினார்.தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் "சலோ" என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகினார்.


இருப்பினும் இவருக்கு சிறந்ததொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் தான் கீதா கோவிந்தம்". இப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபல்யமானார்.பின்பு தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

 தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர்  வம்சி பைடிபள்ளி இயக்கி வரும் வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக  நடித்து வருகின்றார்.ஐதராபாத்தில் நடந்த வரும் இப்படத்தின் படப்பிடிப்பானது நடந்து வருகின்றது.


இந்நிலையில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கும் குட்பாய் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொள்ள டெல்லி சென்ற நடிகை ராஷ்மிகா மந்தனா, டெல்லியில் உள்ள புகழ்பெற்ற இம்பீரியல் ஹோட்டலில் தங்கியுள்ளார். அங்கிருந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


 இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.இந்த இம்பீரியல் ஹோட்டலில் ஒரு நாள் தங்குவதற்கான வாடகை மட்டும் இந்திய பண மதிப்பில் சுமார் 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.உலக அளவில் இந்த ஹோட்டல் புகழ் பெற்றது ஆகும். மிகப் பழமையான ஐந்து நட்சத்திர விடுதிகளில் இந்த ஹோட்டலும் இடம் பெற்றுள்ளது.






Advertisement

Advertisement