• Sep 20 2024

ரசிகருக்காக ராஷ்மிகா செய்த செயல்-புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் தான் ராஷ்மிகா.சமீபத்தில் வெளியான புஷ்பா படம் மூலம் இவர் வேறொரு நடிப்பை வெளிகாட்டி ரசிகர்களிடத்தே கொண்டாடப்பட்டவர்.

குறிப்பாக அவர் சமூகவலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு எந்தவித தயக்கமும் இல்லாமல் பதிலளிப்பது, பொதுவெளியில் அவர்களுடன் எந்த பாகுபாடும் காட்டாமல் புகைப்படம் எடுத்துக்கொள்வது என எளிமையான ஒரு நடிகையாக காட்சியளிப்பதால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரை பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் கூடிவிடுவார்கள்.

மேலும் அப்படி சமீபத்தில் ஒரு படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியில் நடிப்பதற்காக தனது கேரவனில் இருந்து இறங்கி வந்தார் ராஷ்மிகா. அப்போது அங்கே கூடியிருந்த புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தபடியே அங்கிருந்த ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் ராஷ்மிகா. அத்தோடு ஒருசில ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

அப்படி ஒரு ரசிகர் ராஷ்மிகாவுடன் புகைப்படம் எடுக்க முன்னால் வந்தபோது ராஷ்மிகாவின் பாதுகாவலராக இருந்த ஒரு பவுன்சர் அவரை தள்ளிவிட முயற்சி செய்தார் .ஆனால் கண்களாலேயே அந்த பவுன்சரை ஒதுங்கி இருக்குமாறு உத்தரவிட்ட ராஷ்மிகா முகத்தில் எந்தவித மாறுபாடும் காட்டாமல் புன்சிரிப்புடன் அந்த ரசிகருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement