ராஷி கன்னா ஒரு இந்திய நடிகை ஆவார். மேலும் இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத் தொழில்களில் பிரதானமாக வேலை செய்பவர்.
இந்தி திரைப்படமான மெட்ராஸ் கபேயில் துணை நடிகையாக அறிமுகமான இவர், தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் திரைப்படத்தில் அறிமுகமானார்.
அதுமட்டுமல்லாமல் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருந்தார். பின்னர் அவர் பெங்கால் டைகர் , சுப்ரீம், ஜெய் லவ குசா மற்றும் தோலி ப்ரேமா போன்ற வெற்றிகரமான படங்களில் தோன்றினார்.
பின்னர் சங்கத்தமிழன், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்நிலையில் ரசிகர்களை கவரும் வகையில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை ராஷி கண்ணா.தற்போது மரக்கன்றுகளை நடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ராஷி கண்ணா. இதோ அந்த புகைப்படம்...
Listen News!