நடிகர் பாக்கியராஜின் மகன் சாந்தனு வேட்டியை மடிச்சுக் கட்டு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்திய நிலையில், சக்கரகட்டி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அந்த படத்தில் இடம்பெற்ற டாக்ஸி டாக்ஸி, செல்லம்மா உள்ளிட்ட பாடல்கள் மட்டுமே ஹிட்டாகின. படம் படுதோல்வியை சந்தித்தன.
அதன் பின்னர் பல படங்களில் சாந்தனு சிரமப்பட்டு நடித்தாலும் பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. மாஸ்டர் படத்தில் பார்கவ் கதாபாத்திரத்தில் நடித்தும் விஜய்யை காப்பாற்றும் காட்சிகள் எல்லாம் டெலிட் பண்ணிட்டாங்க என சமீபத்தில் பஞ்சாயத்து வைத்திருந்தார்.
இந்நிலையில், அவர் நடிப்பில் இந்த வாரம் வெளியான இராவண கோட்டம் திரைப்படம் பெரிய வெற்றியை கொடுக்கும் என ரொம்பவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சாந்தனுவுக்கு இந்த படத்தின் ரிசல்ட்டும் சரியாக அமையவில்லை என்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட இளைஞனாகவே மாறி நடிப்பில் எந்தளவுக்கு கஷ்டப்பட்டு நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு சாந்தனு கஷ்டப்பட்டு நடித்தார் என்றும் சாதிய பிரச்சனை பற்றிய விஷயங்கள் இந்த படத்தில் இடம்பெற்று இருந்ததாக பல பிரபலங்கள் செலிபிரிட்டி ஷோவை பார்த்து விட்டு பாராட்டினர். ஆனால், வெள்ளிக்கிழமை குறைவான தியேட்டர்களில் வெளியான சாந்தனுவின் இராவண கோட்டம் படத்தை பார்க்க ரசிகர்கள் பெரிதளவில் ஆர்வம் காட்டவில்லை என்பதை பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட் பளிச்சென காட்டி உள்ளது.
சுமார் 6 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் 4 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் கொரோனா உள்ளிட்ட ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கி ரொம்பவே தாமதமாக இந்த வாரம் வெளியானது. ஆனால், இதுவரை 3 நாட்கள் ஓடிய இந்த படம் வெறும் 45 லட்சம் மட்டுமே வசூல் செய்ததாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.ஒட்டுமொத்தமாக ஒரு கோடியாவது படத்தின் வசூல் வருமா? என்பதே சந்தேகம் தான் என்றும் கூறுகின்றனர்.
Listen News!