• Sep 20 2024

போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து உண்மையை சொன்ன ரவி- மீனாவை பாதியிலேயே விட்டிட்டு போன முத்து- Siragadikka Aasai Promo

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் மீனா போன் பண்ணி ரவிக்கு நடந்த விஷயம் எல்லாவற்றையும் சொல்கின்றார். அத்தோடு நான் செத்தா என்னைப் பார்க்க வருவீங்க தானே என்று சொல்ல ரவி போலீஸ் ஸ்டேசனுக்கு ஸ்ருதியுடன் வருகின்றார்.

ரவியைக் கண்டதும் முத்து அவரைப் போட்டு அடிக்க,ஸ்ருதி நாங்க மேஜர். இருவரும் விருப்பப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நான் ரவி கூட தான் போவேன் என்று சொல்ல போலீஸ் வந்து அண்ணாமலையை விடுவிக்கின்றனர்.

அப்போது ரவி அண்ணாமலையிடம் மன்னிப்புக் கேட்க அண்ணாமலை ரவியை தள்ளிவிட்டு போகின்றார். தொடர்ந்து எல்லோரும் வீட்டுக்கு கிளம்ப மீனாவும் காரில் ஏறப் போக முத்து நீ எங்க வாற அவனுக்கு சொன்ன மாதிரி தான் நீயும் இப்பிடியே கிளம்பு என்று சொல்ல மீனா என்ன செய்வதென்று தெரியாமல் தனியாக நிற்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement