• Sep 20 2024

‘2K Couples’ என்ற கேப்ஷனுடன் ரவீந்தர் மகாலட்சுமி வெளியிட்ட கலக்கல் போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் என்ற அடையாளத்தோடு வலம் வருபவர் தான் ரவீந்தர். இவர் இறுதியாக பாக்கியராஜ், அதுல்யா ரவி நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தை தயாரித்து இருந்தார் 

இந்நிலையில் அண்மையில் தயாரிப்பாளர் ரவீந்தர் பிரபல விஜே மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.மேலும் 2000த்துக்கு பின் 90ஸ் கிட்ஸ் மத்தியில் ஆங்கராக பரிச்சயமானவர் விஜே மகாலட்சுமி சமீபகாலமாக சீரியலில் நடித்து வருகின்றார்.


மேலும் இவர்கள் இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.இதுகுறித்து அந்த சமயத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் தம்முடைய வலைப்பக்கத்தில், “மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்லவாங்க., ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையை கிடச்சா...குட்டி ஸ்டோரி வித் மை பொண்டாட்டி!'” என பதிவிட்டு விஜே மகாலட்சுமிக்கு தாலி கட்டும் திருமண புகைப்படங்களை பதிவிட்டார். இந்த புகைப்படங்கள் வைரலாகின.

.இந்நிலையில், ரசிகர்கள் அண்மையில்  பதிவிட்டுள்ள தங்களது புகைப்படத்தை தமது இன்ஸ்டாவில் பகிர்ந்த, மகாலட்சுமி ரவீந்தர், ‘2K Couples’ என கேப்ஷன் போட்டுள்ளார். இந்த பதிவு செம்ம வைரலாகி வருகிறது.  


இவர்கள் இருவரும் “இந்த விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களை பார்க்கும் போது, ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற விஷயம் தான் அதிகமாகிறது.. அதற்காக அவர்களுக்கு நன்றிகள்” என்றும்  அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement