• Sep 20 2024

காதல் மனைவிக்காக தனித்துவம் வாய்ந்த புதிய வீடொன்றைக் கட்டும் ரவீந்திரன்- அதன் பெறுமதி எவ்வளவு தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகி வரும் விடயம் என்றால் விஜே மகாலட்சுமி -  ரவீந்திரன் திருமணம் தான்.இவர்களின் திருமணமும் அண்மையில் தான் நடந்து முடிந்தது.இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்தும் வந்தனர்.

 திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான மகாலட்சுமி விவாகரத்து பெற்றுவிட்ட நிலையில் சீரியல்களில் பிஸியாக இருந்தார். இதற்கிடையே பல சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையிலேயே ரவீந்திரனை திருமணம் முடித்துள்ளார்.


திருமணத்திற்கு பிறகு சோசியல் மீடியாக்களில் அதிக பேட்டி கொடுத்து வரும் அந்த ஜோடி குறித்து பலரும் தாறுமாறாக கமெண்ட் செய்து வந்தாலும் அதை எவற்றையும் பொருட்படுத்தாமல் தனது காதலியை கரம் பிடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார் ரவீந்திரன்.

அத்தோடு திருமணத்திற்கு பிறகு போட்டோ சூட்டிலும் பிசியாக இருக்கும் இந்த ஜோடி குறித்து சமீபத்தில் ஒரு தகவல் வைரல் ஆகி வருகிறது. அதாவது மகாலட்சுமிக்கு என 300க்கும் மேற்பட்ட பட்டு புடவைகள் உடன்  உடல் முழுவதும் தங்க நகைகளால் மகாலட்சுமியை அலங்கரித்துள்ளார் ரவீந்திரன்.


மேலும் ரவீந்திரன் புது மனைவிக்காக தனித்துவம் வாய்ந்த வீட்டையும் கட்டி உள்ளாராம். வீட்டிற்குள்ளேயே நீச்சல் குளம் உள்ளிட்ட பிரம்மாண்டங்களை அமைத்து இந்த வீட்டை வடிவமைத்துள்ள தயாரிப்பாளர் இதற்காக 75 லட்சம் வரை செலவிட்டுள்ளாராம். அத்தோடு புதுமண தம்பதிகளுக்கான கட்டில் தங்கத்தில் இழைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement