• Sep 20 2024

40வது பிறந்தநாள் கொண்டாடும் ரியல் பான் இந்தியா ஸ்டார் ஃபஹத் பாசில்!- குவிந்து வரும் பாராட்டுக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் 'கையெத்தும் தூரத்து' என்ற படம் மூலம் 2002ல் நடிகராக அறிமுகமானவர் தான் ஃபஹத் பாசில்,கேரளாவில் பிறந்த இவர் வழக்கமான சினிமா நாயகர்களுக்கான எந்தவித அடையாளங்களும் இல்லாமல் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் ஆரம்ப காலங்களில் வெளியாகிய திரைப்படங்கள் படு தோல்வியையே சந்தித்தன.

பஞ்ச் வசனம் பேசியபடி விரல்களால் கோதிவிட முடியாதபடியான சிகை அலங்காரம், ஏற்றம் கொண்ட நெத்தி, நீளமான மூக்கு, பெரிய கண்கள் என மிக சாதாரணமான முகப்பொலிவோடு கேமராவின் முன்னால் நின்ற ஃபஹத் அடுத்தடுத்து செய்ததெல்லாம் மாயாஜாலங்களுக்கு நிகரானது. காதல், கருணை, காமம், குரூரம், கோபம், வீரம் என நவரசங்களையும் தனது விழிகளால் நகலெடுத்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்.

எந்த மாதிரியான வெற்றிடங்களையும் கொண்டிராத மலையாள திரையுலகில், ஃபஹத் தனியொரு சிம்மாசனத்தை தனக்கென அமைத்துக்கொண்டார். இதனால் தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளிலும் வாய்ப்பினைப் பெற்று நடித்து வருகின்றார்.

மலையாளத்தில் பீமெயில் கோட்டயம், டையமண்டு நெக்லேஷ், அன்னாயும் ரசூலும், மஹேஷிண்டே பிரதிகாரம், டேக் ஆஃப், கும்பளாங்கி நைட்ஸ், ட்ரான்ஸ், ஜோஜி, மாலிக், தமிழில் சூப்பர் டீலக்ஸ், விக்ரம், தெலுங்கில் புஷ்பா போன்ற படங்களில் ஃபஹத் தனது பாத்திரங்களை சிறப்பாக நடித்துக் கொடுத்து உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார்.

இந்நிலையில், இன்று ஃபஹத் பாசில், தனது 40வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement