• Sep 21 2024

சாதனை படைக்கும் 'RRR' படம்…எந்த ஒரு படத்திற்கும் கிடைத்திடாத அங்கீகாரம்…என்ன தெரியுமா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மாபெரும் வெற்றிப்படமாகிய பாகுபலி இரண்டாம் பாகத்திற்கு பின் மீண்டும் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ஐந்து ஆண்டுகள் கழித்து கடந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள திரைப்படம் RRR. நடிகர் ராம் சரண் மற்றும் அவரோடு இணைந்து ஜூனியர் என்.டி.ஆர் முதல் முறையாக நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு இப்படம் வெளியாக முதல் இருந்தே மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பினையும், திரைப்பிரபலங்கள் பலரிடமிருந்து பாராட்டுக்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது இப்படமானது உலகளவில் 1150 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரியளவிலான சாதனையையும் படைத்திருந்தது.

இந்த நிலையில் இப்படத்தின் ஹிந்தி டப்பிங் Netflix-ல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அப்போதில் இருந்து இப்படம் தமிழ் நாட்டில் மட்டுமன்றி உலகளவிலும் அதிகளவிலான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகின்றது. இப்படத்தைப் பார்த்துவிட்டு பல ஹாலிவுட் பிரபலங்களும் தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் Nate Offord என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் RRR படத்தின் முக்கிய காட்சி ஒன்றினை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோ 1 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது. மேலும் இவர் வெளியிட்ட முதல் இந்திய வீடியோ இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement