அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'ஜவான்'. அத்தோடு நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
அந்தவகையில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. சமீபகாலமாக பாலிவுட் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்துகொண்டிருக்கும் நிலையில் ‘ஜவான்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் தற்போது திடீரென புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. இவ்வாறாக ஜவான் படத்திற்கு உருவாகி இருக்கும் இந்த எதிர்ப்புக்கான முக்கிய காரணம் என்னவெனத் தெரியாவிட்டாலும் ரசிகர்கள் ஊகித்து ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
✂️✂️ Would you #BoycottJawanMovie ? pic.twitter.com/Lp77ZHftSp
அதாவது ஜவான் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் சனாதனத்தை எதிர்த்து அமைச்சர் உதயநிதி பேசியமை தான் இதற்கு காரணம் என ஒரு சிலர் கூறி வருகின்றனர்.
Listen News!