தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் நடிகர் தனுஷ். இவர் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குநர் எனப்பல அவதாரங்களை எடுத்து பல்துறை ஆளுமை கொண்ட நபராக விளங்குகின்றார்.
இவர் திரைப் பின்னணியை மையமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது ஆளுமையால் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளமையைக் காணலாம். மேலும் 2002 -ஆம் ஆண்டு வெளிவந்த 'திருடா திருடி' என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து 'சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, மாரி, அசுரன்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது 'ராஞ்சனா' என்ற ஹிந்தித் திரைப்படத்தில் நடித்து ஹிந்தியிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இவ்வாறாக 40 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் பல விருதுகளையும் வென்றுள்ளார். அதுமட்டுமல்லாது தனுஷ் தனது 'வுண்டர்பார் பிலிம்ஸ்' மூலமாக படங்களைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டு வருகின்றார். இதனால் இவருக்கு 'சிறந்த நடிகர் விருது' மட்டுமல்லாமல் இவருடைய தயாரிப்பில் வெளிவந்த 'விசாரணை' படத்திற்கு தேசிய விருதும் வழங்கப்பட்டமை நாம் யாவரும் அறிந்த ஒரு விடயம் ஆகும்.
இவ்வாறாக படங்களில் சிறப்பாக நடித்து வரும் இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் தன்னுடைய மனைவியான ஐஸ்வர்யா ராயினை விகாரத்துப் பெற்றுப் பிரிந்து வாழ்ந்து வருகின்றமை யாவரும் அறிந்த ஒரு விடயமே. இதனால் இவர்கள் இருவரதும் திருமண வாழ்க்கை குறித்த பல தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாயின.
இந்நிலையில் இன்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் தனுஷு க்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவரது பிறந்தநாளைக் குறித்து இவருடன் தேசிய விருது பெற்ற 'அசுரன்' படத்தில் தனுஷுக்கு மனைவியாக நடித்த மஞ்சு வாரியர் அவருக்கு இன்ஸ்டா ஸ்டோரீஸில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்காத விடயம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது ரீல் மனைவிக்கு இருக்கிற அக்கறை கூட ரியல் மனைவிக்கு கணவன் மேல் இல்லையா என ஐஸ்வர்யாவை குறை கூறியும் வருகின்றனர்.
பிற செய்திகள்
- தேவதை போல் ஜொலிக்கும் லொஸ்லியா…வைரலாகும் இன்ஸ்டாப் பதிவு..!
- பிரபல நடிகரின் பட ஷூட்டிங்கை நிறுத்திய பெண் அதிகாரி…என்னம்மா இப்பிடி பண்ணிட்டீங்களே..!
- சிம்புவிற்கு வலை விரிக்கின்றாரா அமலா பால்…குழம்பிப் போயுள்ள ரசிகர்கள்..!
- விஜய் சேதுபதியின் பள்ளிப் பருவக் காதல்…யார் அந்த ஜானு..?அவரே கூறிய உருக்கமான சம்பவம்…!
- “நானே ஷாக்கிங்ல தான் இருக்கேன்”…ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள பானுப்ரியாவின் சகோதரி…அவரே கூறிய சுவாரஷியமான தகவல்…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!