தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரெஜினா. இவர் 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தார். இப்படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தமாயால் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதாவது 'அழகிய அசுரா, சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம்' போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் தனது நடிப்பினை வெளிப்படுத்த தொடங்கியிருக்கின்றார். அத்தோடு மலையாளத்திலும் கால் படித்திருக்கின்றார். அந்தவகையில் தற்போது மோகன்லால் நடிக்கும் 'பிக் ப்ரதர்' என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் 'சூர்ப்பனகை' என்னும் படத்தில் நடிக்க உள்ளார்.
ஆரம்பத்தில் இவரை தேடி பட வாய்ப்புக்கள் எதுவும் வராமல் இருந்தமையினால் கவர்ச்சியை கொஞ்சம் தூக்கலாக காட்ட ஆரம்பித்தார். கவர்ச்சிக்குத் துணிந்த நிலையில் அவருக்குப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. இதனால் புதுமுக ஹீரோயின்கள் வந்த பிறகும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தாக்கு பிடித்து நடித்துக் கொண்டிருகின்றார்.
ரெஜினா ஏற்கெனவே குறிப்பிட்ட படங்களை விட தமிழில் 'நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்கரம் கள்ளபார்ட், கசட தபற' போன்ற படங்களிலும், அதுமட்டுமன்றி தற்போது கூட 'Fingertip 2' என்ற Web Series இலும் நடித்திருக்கின்றார். அவற்றை தொடர்ந்து 'Anya’sTudorial' என்னும் Web Series இலும்நடித்தார்.
இவ்வாறாக தன்னுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்ற ரெஜினா தற்போது பிகினி போல் ஒரு படுமோசமான உடை அணிந்து நீச்சல் அடிப்பது போல ரசிகர்களை அதிர வைத்துள்ளார். இதனைப் பார்த்த நம்ம ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா?, “அடியே ஒத்த தாமரை, என் வாழ்வில் வந்த தேவதை..” என்று கமெண்டுகளால் ரெஜினாவை வர்ணித்து வருகின்றனர்.
Listen News!