• Nov 10 2024

தவறாகப் பேசியவர்களை கை நீட்டி அடித்த ரெஜினா…அடடே ரொம்ப கோவக்காரியாக இருப்பாங்க போல..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஒன்பது வயதாக இருக்கும் போது ஸ்பிலாஷ் என்ற ஒரு குழந்தை தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம் தொகுப்பாளராகப் பனி புரிந்து இன்று தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து சினிமாவையே கலக்கி கொண்டிருக்கும் ஒருவரே நடிகை ரெஜினா. இவர் ஆரம்பத்தில் பாலாஜி மோகனின் 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற குறும்படத்திலே நடித்திருந்தார். இப்படமே பின்னர் அதே பெயரில் 2012 இல் முழு நீளப்படமாக உருவாக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் இவர் 'கண்ட நாள் முதல்' என்ற திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக அறிமுகமாகியிருந்தார். அதேபோன்று தெலுங்கு படத்துறையில் 'சிவா மனசுல ஸ்ருதிலோ' என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகியிருந்தார். இவ்வாறாக தொடர்ந்து 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'ராஜ தந்திரம்', 'மாநகரம்', 'சரவணன் இருக்க பயமேன்', ஜெமினி கணேஷனும் சுருளி ராஜனும்' எனப் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் "என்னைத் தவறாகப் பேசியவர்களை கோபம் வந்து கை நீட்டி அடித்து இருக்கின்றேன்" எனக் கூறியிருக்கின்றார். இவர் இவ்வாறு கூறிய விஷயம் பற்றி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக அப்பேட்டியில் ரெஜினா கூறுகையில் "தைரியம் என்பது எங்கோ வெளியே இருந்து எடுத்துக் கொண்டு வருவது அல்ல. அது நமக்குள்ளேயே இருக்கின்றது என்ற விஷயம் எனக்குப் பள்ளி நாட்களிலேயே புரிந்து விட்டது. இப்போதும் நான் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றேன் என்று நிறைய பேர் சொல்லுகின்றார்கள். ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை. எனக்கு கோபம் வந்தால் என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது." எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் "பள்ளி நாட்களில் மட்டுமல்ல கல்லூரியிலும், சினிமா துறைக்கு வந்த பிறகும் என்னைத் தவறாக பேசியவர்களை கோபம் வந்து அடித்திருக்கின்றேன். எனது கோபத்திற்கு பின்னால் அகம்பாவம் இருக்காது காரணம் இருக்கும்" எனக் கூறியுள்ளார். இதைக் கேட்ட ரெஜினா ரசிகர்கள் "பார்க்கிறதற்கு தான் சாதுவான பெண்ணாய் இருக்காங்க ஆனால் ரொம்ப கோபக்காரி போல" எனக் கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement