சின்னத்திரையில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்து இன்று தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்த ஒருவரே ரேகா நாயர். அந்தவகையில் இவர் பார்த்திபன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகியிருந்த 'இரவின் நிழல்' என்ற படத்தில் அரை நிர்வாண காட்சியில் நடித்ததன் காரணமாக சிறுது காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வந்திருந்தார்.
ரேகா நாயரின் இந்த துணிச்சலான நடிப்புக்கு பல தரப்புக்களிடமிருந்து பாராட்டுக்கள் கிடைத்தாலும், அதே நேரத்தில் எதிர்ப்புகளும் கிளம்பிய வண்ணம் இருந்தன. பல பேட்டிகளை அளித்து வரும் ரேகா நாயர் பேட்டியொன்றில் "எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் பெண்கள் அணியும் உடை தான், பேருந்தில் செல்லும் போது சில உடைகளை பெண்கள் அணிந்து சென்றால், சில ஆண்கள் தொட்டால் அதனை அந்தப் பெண்கள் அனுபவிக்க தான் வேண்டும்" என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.
இவரின் இந்தக் கருத்துக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ரேகா நாயர் இந்தக் கருத்துக்கு விளக்கமளித்துள்ளார். அதாவது "ஒரு ஆண் ஒரு பெண்ணை ஆசையில் தொடுவதற்கும், வேறு மாதிரி தொடுவதற்கும் வித்தியாசம் இருப்பதாகவும், ஆண் இருக்கும் பேருந்தில் உடல் பாகம் தெரியும் படி ஒரு பெண் உடையணிந்திருக்கும் போது, ஒரு ஆண் தெரிந்தோ தெரியாமலோ அவளை தொடும் போது அந்த தொடு உணர்வை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் தான் சொல்லவில்லை" எனக் கூறியுள்ளார்.
மேலும் "நான் அப்படிக் கூறியது அவன் எந்த நோக்கத்தில் அதை செய்கிறான் என்பதை பெண்கள் உணர்வதற்காகவே, அந்த ஆண் தவறான எண்ணத்தில் நடந்தால் கோழி கழுத்தை திருவுவது போல் அவனை திருவி போடலாம். ஆனால் பெண்களே தவறாக ஆடை அணிந்துவிட்டு பின்பு ஆண்களை குற்றம் சொல்வீர்கள், அது தவறு என்று தான் சொன்னேன்" எனவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது "ஒரு ஆண் நம்மை பார்க்கும்போதே, அவன் எந்த நோக்கத்தில் நம்மை பார்க்கிறான் என்பது நமக்கு தெரிந்துவிடும். அதைத்தான் நான் அப்போது சொன்னேன். இதனால் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக சொன்னேன், இதை ஒரு சில சமூக வலைத்தளங்கள் தவறாக சித்தரித்து பரப்பி விட்டார்கள்" எனவும் கூறியுள்ளார் ரேகா நாயர்.
Listen News!