• Sep 20 2024

நடிகர் மாதவனின் ‘ராக்கெட்ரி‘ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2000ம் ஆண்டு இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்த மாதவன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தார்.

தமிழ்சினிமாவில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் மாதவன். இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கும் "ராக்கெட்டரி" என்ற படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இந்தப் படத்தை நடிகர் மாதவனை இயக்கியும் நடித்தும் வருகிறார்.

இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ரிலீசுக்கு சரியான நேரம் பார்த்து இரண்டு வருடங்களுக்கு மேலாக காத்திருந்தனர். சில முறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டது.

சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது வரிசையாக பிரபல நடிகர்களின் படங்களை வெளியிடுவது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட நடிகர் மாதவன் இந்த படம் ஜூலை முதலாம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement