தமிழ் சினிமாவில் இயக்குநராகத் தடம் பதித்து தற்போது ஒரு நடிகராக உயர்ந்து நிற்பவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் அஜித் நடித்த 'வாலி', விஜய்யின் 'குஷி' உட்படப் பல வெற்றி படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
கதாநாயகனாக நடித்து வந்த இவருக்கு தற்போது பல படங்களில் வில்லன் வேடங்கள் வந்து குவிகின்றன. அதிலும் குறிப்பாக சமீபத்தில் வெளியான 'மாநாடு, டான்' ஆகிய படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
அதுமட்டுமல்லாது மேலும் இவர் கைவசம் தற்போது 'பொம்மை', 'மார்க் ஆண்டனி' மற்றும் 'ஆர்சி 15' ஆகிய படங்கள் உள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார்.
அதாவது புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் ஆனது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்நிலையில், இதன் புதிய அப்டேட் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அந்தவகையில் 'வதந்தி' வெப் தொடரானது வருகிற டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் எஸ்.ஜே.சூர்யா, "இது என்னை பற்றிய வதந்தி அல்ல" என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருவதோடு சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகின்றது.
Listen News!