• Sep 21 2024

வெளியானது வாரிசு படத்தின் செக்கன்ட் லுக்- மகிழ்ச்சியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் "தளபதி" என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற நடிகர் விஜய். இவரின் நடிப்புக்கும், நடனத்திற்கும் என்றே கோடிக்கணக்கான ரசிகர் கூட்டம் உண்டு.

இவரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த சில தினங்களாக ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியிருப்பது மட்டுமல்லாது, பல சர்ப்பிரைஸ் செய்திகளும் வெளியாகிய வண்ணமே உள்ளன.

இந்நிலையில் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் தற்போது நடித்து வருகின்ற "வாரிசு" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அவரது பிறந்த நாளான இன்று இப்படத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது லுக் போஸ்டர்களும் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் தற்போது "வாரிசு" திரைப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இதில் நம்ம தளபதி விஜய் சிறுவர்களோடு சிரித்த முகத்தில் செம க்யூட் ஆக இருக்கின்றார். இதனைப் பார்த்த தளபதி ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா? அப்போஸ்டரை தமது சமூக வலைத்தள பக்கங்களில் ஷேர் செய்து மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது மூன்றாவது லுக் போஸ்டரும் இன்னும் சில நேரங்களில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பிலும் இருக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement