தமிழ் சினிமாவில் 90களில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகர் முரளி. இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றிருக்கின்றன.அப்படி இவரது நடிப்பில் வெளியாகி கூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சுந்தரா டிராவல்ஸ்.
அசோகன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு முரளி மற்றும் வடிவேலு அசத்தலான காமெடியில் வெளியானது இப்படம். ஒரே ஒரு பஸ் அதைவைத்து கதை மிகவும் காமெடியாக செல்லும்.அதிலும் முரளி மற்றும் வடிவேலு காம்பினேஷன் படத்தில் அட்டகாசமாக இருக்கும்.
தமிழ் சினிமாவின் சிறந்த காமெடி படங்கள் என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் இந்த படம் கண்டிப்பாக இடம்பெறும்.இந்த படத்தில் வசந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ராதா. இவரின் முதல் படமே இதுதான், அதன்பிறகு Game, அடாவடி, காத்தவராயன் போன்ற சின்ன சின்ன படங்களில் நடித்திருந்தார்.
தற்போது இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சினிமாவில் நடிக்க வந்துள்ளார், அதுவும் சின்னத்திரையில் தான்.விஜய் தொலைக்காட்சியில் புதியதாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா 2 தொடரில் தான் வில்லியாக நடிக்க தொடங்கியுள்ளார். இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!