சினிமாவில் தனது 5 வயதில் இருந்து நடித்து வருபவர் தான் நடிகை சண்முக சுந்தரி. இவர் முன்னணி நடிகர்களான எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடன் நடித்தவர். சினிமாவில் சுமார் 45 வருடங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருந்தவர். இதுவரையிலும் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஏராளமான படங்களுக்கு டப்பிங் குரலும் கொடுத்துள்ளார்.இவர் எம்.ஜி.ஆருடன் இதயக்கனி, நீரும் நெருப்பும், கண்ணன் என் காதலன், என் அண்ணன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் நாடகம் மற்றும் திரைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக, கலைமாமணி விருதை பெற்றுள்ளார். வடிவேலுக்கு பல படங்களில் அம்மாவாக நடித்துள்ளார், ஆனாலும் மக்களுக்கு தெரிந்த குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு பிரபலமான படம் மிடில் க்ளாஸ் மாதவன். அந்த படத்தில் வடிவேலு குடித்து விட்டு, சண்முகசுந்தரியை பார்த்து பேசும் அது வேற வாய்… இது நாறவாய் என்ற நகைச்சுவை மிகவும் பிரபலம்.
சண்முகசுந்தரிக்கு டி.கே.கலா, நீலா, மாலா, மீனா, செல்வி என்ற 5 மகள்கள் உள்ளனர். இவர்களில் டி.கே.கலா சினிமாவில் பின்னணி பாடகியாகவும், நடிகையாகவும் இருக்கிறார் .2012 ஆம் ஆண்டு மே 1-ம் தேதி அதிகாலை யின் உடல்நலக் குறைவால் இறப்புக்குள்ளானார். இவர் இறந்தாலும் இப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனிதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!