பிரபல பாடகர் சந்தோஷ் நாராயணனின் மாபெரும் இசை நிகழ்ச்சி இந்தமுறை இலங்கை மண்ணில் மீண்டும் இடம் பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் திகதி மாற்றம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசை நிகழ்ச்சியை பிறிதொரு தினத்திற்கு மாற்றுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது.
அக்கடிதத்தில் கூறப்பட்ட விடயமானது " தமிழ் உறவுகளை அவமதிக்கும் செயற்பாடு ஒக்டோபர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் 1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த வைத்தியர்கள், தாதியர்கள் நோயாளர்கள் உட்பட பொதுமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதினை வருடா வருடம் மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அன்றைய நாளில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இசை நிகழ்ச்சியை பிறிதொரு தினத்திற்கு மாற்றுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் குறித்த நாட்களை இளைஞர்களுக்கான மகிழ்ச்சிகரமான களியாட்ட நாட்களாக இலங்கை, இந்திய அரசுகள், மாற்றியமைக்க முயலுவதாகவும் எனவே இசை நிகழ்ச்சிகளில் தாங்கள் கலந்து கொள்வதானது, படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் உறவுகளை அவமதிக்கும் செயற்பாடு என்பதுடன் இனவழிப்புக்கு துணைநிற்கும் செயற்பாடாகவும் அமைந்துவிடும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணிஅனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
உணர்ந்துகொண்டு, பொருத்தமான வேறொரு திகதியில் தங்கள் நிகழ்வை மாற்றியமைக்குமாறு தமிழ் தேசிய முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் இசை நிகழ்ச்சிக்கான திகதிகள் மாற்றம் செய்யப்படும் அதன் அறிவிப்புகள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.
Listen News!