ஒரு பேட்டியின் போது நடிகை நதியாவை பேட்டியாளர் இவ்வாறு கேள்வி ஒன்றை கேட்டிருந்தார், "ஷூட்டிங் வரும் போதும் போகும் போதும் உங்க அப்பாவோட தான் வந்து போவீங்க அப்போ எப்பிடி இந்த காதல் உங்களுக்கு வந்திச்சு" என்று கேட்டிருந்தனர்.
அதற்கு நதியா, சினிமாவிற்கு வர முதலே அவரை தெரியும் அவர் எங்க வீட்டிற்கு பக்கத்து ஏரியா தான். ஸ்கூல் முடிச்சு காலேஜ் போகும் போது அவரை பார்த்திருக்கேன். நங்கள் முதலில் பிரெண்ட்ஸ்ஸாக தான் பழகினோம் சீக்கிரமாவே அது காதல் ஆகிடுச்சு.
அந்த காலத்தில் போன் பேசுற வசதியும் இல்லை கடிதத்தில் தான் பேசிப்போம். இப்போ எல்லாம் நிறைய டைம் இருக்கு ஸ்பென்ட் பண்ண சினிமா போகலாம், வெளியில எங்கயாச்சும் போகலாம். ஆனால் அப்போ எல்லாம் அவர் படிச்சிட்டு இருந்தார், நான் நடித்துக்கொண்டு இருந்தேன். எங்களுக்கு அப்போ வேர்ல்ட் ரொம்ப சின்னது.
அவர் படிக்கிறதுக்காக வெளிநாடு போய்ட்டார், நான் சினிமாவிற்காக டைம் ஸ்பென்ட் பண்ணீட்டு இருந்தேன் அப்போ வீட்டிற்கு தெரியாம கடிதம் அனுப்புறது கஷ்டமா தான் இருந்தது. முதலில் என்னோட அம்மாக்கு தான் தெரிஞ்சது. அவங்க வேற மதம் நான் வேற மதம் இதெல்லாம் ஒத்துவருமா என்று வீட்டுல ஜோசிச்சாங்க.
இப்போ நாங்க எல்லா பெஸ்டிவலும் கொண்டாடுவோம். அவருக்கு ஜாப் கிடைச்ச உடனே கல்யாணம் பண்ணிகிட்டோம். எனக்கு பெரிசா ஆம்பிஷன் இல்லை வாறவங்க நல்லா பாத்துக்கணும் அவளோ தான் இருந்திச்சு. நான் நடிகை என்றதால் நோர்மலான வாழ்க்கை வாழமுடியுமா என்று கேட்டார்.
நான் அவரே போதும் என்று நினைத்தேன். இப்ப இருக்கும் இளைஞருக்கு நான் சொல்ல விரும்புவது, "பார்ட்னருக்கு ரெஸ்பெக்ட் குடுக்கணும்" மரியாதை குடுத்தால் காதல் எல்லாம் தானாவே வரும். பிரெண்ட்ஸ் போல பழகணும் எங்கட பிள்ளைகளுக்கு கூட நாம மரியாதை குடுக்கணும் என்று ஸ்வீட்டா பதில் சொல்லி இருந்தார்.
Listen News!