• Nov 14 2024

அசீம் பற்றி ஒரே வார்த்தையில் பதிலளித்த G.P. முத்து..அதுவும் இப்படி சொல்லிவிட்டாரே..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

யூடியூப் பிரபலம் ஜி.பி. முத்து, பிக்பாஸ் அசீம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தது தற்போது தீயாய் பரவி வருகின்றது.

டிக் டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்து, தூத்துக்குடி மாவட்டம் அருகேயுள்ள உடன்குடி அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர். இவரது காமெடி வீடியோகள் மிகவும் வைரலாகியது.  டிக்டாக் செயலிக்கு பின்னர்  பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் வீடியோ பதிவேற்றி வருகிறார்.

GP முத்துவுக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும். அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை.எனினும் தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் G.P. முத்து என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். எனினும் இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, நிவாஷினி, ராபர்ட், குயின்சி மற்றும் ராம் ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். கடந்த வாரம் ஜனனி வெளியேறினார்.

இவ்வாறுஇருக்கையில்  ஒரு தனியார் நிகழ்வில் கலந்து கொண்ட ஜி.பி. முத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். குறிப்பாக "பிக்பாஸ் அசீம்  பத்தி உங்க ஒப்பீனியன் என்ன?" என்ற கேள்விக்கு ஒரே வார்த்தையில் "நல்லத்தம்பி" என பதில் அளித்தார். மேலும் "எனக்கு எல்லாரையும் பிடிக்கும். எல்லாரும் நல்லவங்க தான்" என ஜி.பி. முத்து கூறியுள்ளார்.

Advertisement

Advertisement