தமிழ் சினிமாவில் 1982ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான "நெஞ்சங்கள்" என்னும் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் மீனா. இவர் இதனைத் தொடர்ந்து எங்கேயோ கேட்ட குரல் ,அன்புள்ள ரஜினிகாந்த் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
தொடர்ந்து கதாநாயகியாக என் ராசாவின் மனசிலே என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்ததோடு தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கின்றார்.
மேலும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்திருந்தார். இவருக்கு நயனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முதல் இவருடைய கணவர் இறப்புக்குள்ளாகியிருந்தார்.
இந்த இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியிருந்தார். அதில் தான் தவறவிட்ட சூப்பர் ஹிட் படத்தை பற்றி பேசியுள்ளார். அதாவர் " கமல் ஹாசன் நடித்து வெளியான ’தேவர் மகன்’ படத்தில் நடிகை ரேவதி நடித்த கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. சில காரணங்களால் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது" என்றும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!