நடிகை நஸ்ரியா தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வந்தவர். குழந்தை நட்சத்திரமாகவே இவர் நடிக்கத் துவங்கி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து தமிழில் நேரம் படம் மூலம் இவர் சிறப்பான என்ட்ரியை கொடுத்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றிருந்தது. இந்தப் படம் நஸ்ரியாவிற்கு ஏராளமான தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.
தமிழில் தனுஷ், ஜெய் மற்றும் ஆர்யாவுடன் இணைந்து நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்காஹ் மற்றும் ராஜா ராணி போனற் படங்களில் நடித்துள்ளார் நஸ்ரியா. தமிழில் குறைவான படங்களிலேயே நடித்திருந்தாலும் இவருக்கு ஏராளமானரசிகர்கள்உள்ளனர். மலையாளம் மற்றும் தெலுங்கிலும் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவந்த நஸ்ரியா, ஒரு கட்டத்தில் பிரபல நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கில் இவர் அடுத்தடுத்த படங்களில் தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார். முன்னதாக இந்த இடைவெளியின் போதே தன்னுடைய கணவரின் படமான டிரான்ஸ் என்ற படத்தில் அவர் நடித்திருந்தார்.
சமூகவலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் நஸ்ரியா. அடுத்தடுத்த பதிவுகளை அவர் பதிவிட்டு வருகிறார். தன்னுடைய போட்டோஷுட் புகைப்படங்கள், கணவருடனான புகைப்படங்கள், விடுமுறை கொண்டாட்டங்கள் உள்ளிட்டவற்றை அவர் பகிர்து வருகிறார். இந்நிலையில் தற்போது தான் ரெஸ்டாரெண்ட் ஒன்றில் சாப்பிடும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். இதில் பர்கர், சிக்கன் 65, பிரெஞ்ச் பரைஸ் என ஏராளமான ஐட்டங்கள் காணப்படுகின்றன.
நமக்கு சோறு முக்கியம் என கேப்ஷனில் தனது இன்ஸ்டாவில் சாப்பிடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது .
Sooru Than Mukkiyam ✨😁 pic.twitter.com/Z144MZwwQm
Listen News!