• Nov 10 2024

“RIP my friend Sagar'-மீனாவின் கணவரின் இறப்பிற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த நடிகர் ஜெயம் ரவி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தனது பார்வையின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களின் உள்ளங்களைக் கட்டிப் போட்ட நடிகை தான் மீனா. இவர் 90களில் ரஜினி, கமல் ,அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பணி புரிந்திருக்கின்றார். இவர் 1982ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர்.

மேலம் தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். பின்பு படவாய்ப்புக் குறைய கடந்த 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2011இல் நயனிகா என்ற பெண் குழந்தையும் பிறந்தது.

இந்த நிலையில் வித்யாசாகர் சில நாட்களுக்கு முதல் உடல் நலக்குறைவால் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கின்றார். நுரையீரல் இரண்டிலும் ஏற்பட்ட பாதிப்பினால் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி மரணித்தார்.

https://twitter.com/actor_jayamravi/status/1541991262122819584

இவர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்தோடு இவரது இறப்பிற்கு சரத்குமார் குஷ்பு எனப் பலரும் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில் தற்பொழுது நடிகர் ஜெயம் ரவியும் ஆழ்ந்த இரங்கல்கள் எனது நண்பன் சாகர் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement