• Nov 14 2024

உடல் எடை அதிகரித்தாலும் வேர்க் அவுட்டை கைவிடாத ரித்திகா சிங்- இவரும் கவர்ச்சியில் குதித்து விட்டாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

2016 ஆண்டு வெளியான குத்துச்சண்டை படமான இறுதிச்சுற்று இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங் . இவர் நிஜத்திலும் ஒரு குத்துச் சண்டை வீராங்கனையாக வலம் வருகின்றார் என்பதும் முக்கியமாகும்.

தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் ரித்திகா நடித்து ரசிகர்களை கவர்ந்தார். விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை மற்றும் ராகவா லாரன்சுடன் சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருந்தார். இருப்பினும் இப்படங்கள் இவருக்கு சரியான வெற்றியைப் பெற்று தரவில்லை.

இதையடுத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியான ஓ மை கடவுளே படத்தில் அசோக்செல்வனுடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படம் வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் சிறப்பாக அமைந்தது.

தற்போது ரித்திகா அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இவரது கை வசம் மூன்று படங்கள் உள்ளன. பாக்ஸர், வணங்காமுடி, மற்றும் பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ரித்திகா.

அடுத்தடுத்த கவர்ச்சிப் படங்களை தன்னுடைய சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை மட்டுமில்லாமல் திரையுலகினரையும் கவர்ந்து வருகிறார். முதல் படத்தில் போல இல்லாமல், சற்றே குண்டாகி கும்மென்றாகியுள்ளார் ரித்திகா. இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வேர்க் அவுட்டிற்கு பிந்தைய புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement