கௌதம் மேனன் இயக்கிய படத்தில் நடித்த நடிகை ஒருவர் ஹாலிவுட் நடிகை கேரக்டரை காப்பியடித்து போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தெலுங்கில் நடித்து வரும் நடிகை ரிதுவர்மா. தமிழில் ’வேலை இல்லா பட்டதாரி 2 ’ என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்த படம் என்றால் அது ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் தான். இந்த படத்தில் அவரது நடிப்பு அட்டகாசமாக இருந்த நிலையில் அதனை அடுத்து அவருக்கு தமிழ் திரை உலகில் வாய்ப்புகள் குவிந்தது.
’கணம்’ ’நித்தம் ஒரு வானம்’ ’மார்க் ஆண்டனி’ போன்ற படங்களில் நடித்த ரிது வர்மா, கௌதம் மேனன் இயக்கிய ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் காலதாமதம் ஆகி கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் வெளியானால் அவருக்கு தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத இடம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அவர் ’ஸ்வாக்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படம் மிக விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் நடிகை ரிது வர்மா இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவர் இரண்டு மில்லியனுக்கு மேல் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது பிளாக் மேஜிக் என்ற பெயரில் அவர் பதிவு செய்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக ஹாலிவுட் புகழ் பெற்ற ’ஆடம்ஸ் பேமிலி’ என்ற நாடகத்தை தழுவி ’வெட்னஸ்டே’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகையின் ஸ்டைலில் அவர் போட்டோஷூட் வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!