• Nov 17 2024

பாரதி கண்ணம்மா திருமணத்தில் ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அசத்தல் பரிசு.!!- இதை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இந்த வாரத்துடன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பல போராட்டங்களின் பின்னர் கண்ணம்மா மனம் மாறி பாரதியுடன் சேர்நது வாழ சம்மதம் தெரிவித்து விட்டார். இதனால் முழுக்குடும்பமும் மகிழ்ச்சியில் உள்ளது.


அத்தோடு இருவரும் மீண்டும் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர்.இந்நிலையில், இந்த திருமண நிகழ்ச்சியில் பிரபலங்களான நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, பிக்பாஸ் சினேகன், சீரியல் நடிகை கன்னிகா, பிக்பாஸ் 6வது சீசனில் புகழ்பெற்ற ஷிவின் கணேசன், பிக்பாஸ் முந்தைய சீசன் போட்டியாளரும் பாரதி கண்ணம்மாவில் ஒரு கேரக்டருமான தாமரை செல்வி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.


அப்படி இருக்கையில், பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் திருமணத்தில் வரும் ஆர்ஜே பாலாஜி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு அசத்தல் பரிசை கொடுக்கிறார். ஆர்ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ரன் பேபி ரன் படம், பிப்ரவரி 3 ஆம் தேதியன்று திரை அரங்குகளில் வெளியாகிறது. இதற்காக, பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் கையில் பரிசு ஒன்றை கொடுக்கும் ஆர்ஜே பாலாஜி, அதில் உள்ள பணத்தை கொண்டு குடும்பத்தினர் அனைவரும் ரன் பேபி ரன் படத்தை காண வருமாறு தெரிவிக்கிறார்.


மேலும் இவர்களோடு விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் பலரும் இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement