• Nov 19 2024

உங்க கீழ்த்தரமான அரசியலுக்கு நாங்க தான் கிடைச்சோமா.. த்ரிஷாவுக்கு ஆதரவாக ஆர்கே செல்வமணி அறிக்கை

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

நடிகை த்ரிஷா குறித்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ராஜு என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திரையுலகை சேர்ந்த பலர் த்ரிஷாவுக்கு ஆதரவாகவும், ராஜுவுக்கு கண்டனம் தெரிவித்தும் குரல் கொடுத்துள்ளனர்.

நடிகை த்ரிஷாவும் தனது சமூக வலைத்தளத்தில் இதற்கு கண்டனம் தெரிவித்தார் என்பதும் சேரன், மன்சூர் அலிகான், ஷர்மிளா உட்பட பலரும் த்ரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் பெப்சி சங்கத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி ’உங்கள் கீழ்த்தரமான அரசியலுக்கு எதற்காக எங்கள் துறையினரை வம்புக்கு இழுக்கிறீர்கள்’ என்று கடுமையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:



இன்றைய சமூக வலைதளங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்ட திரு.A.V.ராஜீ என்பவர் திரைத்துறையை குறித்து சில தரமற்ற, அவதூறுகளை கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை த்ரிஷா அவர்களை சம்பந்தப்படுத்தி ஒரு அவதூறை கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாது பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் திரு.கருணாஸ் அவர்களையும் சம்மந்தப்படுத்தி இந்த கீழ்த்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

அரசியலில் ஒருவரை, ஒருவர் தாக்கி கொள்வதற்கு அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்சனையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, கீழ்த்தரமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். செயலை, இத்தகைய அநாகரிகமான கீழ்த்தரமான செயலை, தென்னிந்திய  திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறோம்.

பஞ்சாயத்து தலைவரிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர் முதல் பாரத குடியரசு தலைவராக திருமதி.முர்மு அவர்கள் வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற, இந்த பாரத தேசத்தில் ”பெண்கள் மீதும் அவர்களின் பெண்மை மீதும்” நடத்தப்படுகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்பு கரம் கொண்டு களைய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இவ்வாறு பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement