பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 ஆனது கடந்த அக்டோபர் மாதம் 9ம் திகதி ஆரம்பமாகியது.இந்த நிகழ்ச்சியில் 6 சீசன்களாக நிகழ்ச்சித் தொகுப்பாளராக கமல்ஹாசனே இருந்து வருகின்றார்.
10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது பாதி கட்டத்தை தாண்டியுள்ளது.
தற்போது பிக்பாஸ் வீட்டில் 13 போட்டியாளர்கள் மாத்திரமே உள்ளனர். கடந்த வாரம் குயின்சி இந்த வீட்டிலிருந்து வெளியேறினார். எனவே இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேட் செய்யப்படவுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய குயின்சிக்கு ராபர்ட் மாஸ்டர் கேக் ஒன்றை பரிசாக அனுப்பி வைத்துள்ளார். அதில் என் லவ்லி மகள் என்றும் எழுதப்பட்டுள்ளது. இதனை குயின்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!