• Nov 19 2024

''ராபர்ட் மாஸ்டர் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணினாரு'' - பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரச்சிதா கொடுத்த முதல் பேட்டி

Jo / 1 year ago

Advertisement

Listen News!

 தமிழில் தற்போது பிக் பாஸ்  6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

இவ்வாறுஇருக்கையில் அனைவரும் விரும்பிய நபராக திகழ்ந்த ரச்சிதா  வெளியேறி இருந்தார்.அத்தோடு  ரச்சிதா வீட்டைவிட்டு வெளியேறியது ரசிகர்களுக்கு ஒரு சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.



அந்தவகையில் விஜய் டிவி நடத்திய பேட்டியில் கலந்துகொண்டு கேட்கப்படும் கேள்விகளுக்கு செம கியூட்டா பதில் சொல்லியிருக்கிறார்.

அது என்னவென்று பார்ப்போம்,

எனக்கு ரொம்ப புடிச்ச வீடு அது எல்லாருக்குமே தெரிஞ்சிருச்சு .அந்த வீட்டில ஒவ்வொரு செக்கணும் நான் என்ஜாய் பண்ணலாம்னு நினைச்சேன் அதே மாதிரி என்ஜாய் பண்ணிட்டு  ஹப்பியா பியூட்டிஃபுல்லா இருந்தென்னு சொல்லலாம்.என்னைச் சுற்றி நெகட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் அது என்ன தாக்கக் கூடாது  என்று இருந்தன்.

வெளியில வரும்போது லோரி சவுண்ட் வேலை கேட்டு கொஞ்சம் பயந்துட்டேன் வீட்டுக்கு போனா அப்புறம் கொஞ்சம் தனியா படுத்து தூங்குவது ஒரு மாதிரியா இருந்துச்சு.நான் நோர்மல் ஆகிறதுக்கு சில வாரம் ஆகும். பட் இந்த பீலும் நல்ல இருக்கு.



 பிக் பாஸ் வாய்ஸ்ஸையும் ,ரச்சு என்று கூறும் வார்த்தையையும் மிஸ் பண்றன் ,அதையும் தாண்டி ஒருத்தர மிஸ் பண்றன் என்று சொன்னால் அது ஷிவின்.பிக்பாஸ் ஷார்ட்ல இருந்து எனக்கு ஜனனியை ரொம்ப பிடிக்கும் அவள பாப்பா என்று சொல்லிக்கொண்டே கொஞ்சிட்டு இருப்பேன் .ஜி.பி முத்து அண்ணாவ எனக்கு ரொம்ப பிடிக்கும் .அவரை ரொம்ப மிஸ் பண்றேன் ரொம்ப சீக்கிரமாக போயிட்டாங்க .அவங்கல மறுபடியும்  பார்க்க கிடைச்சா ரொம்ப ஹப்பி .பிடிக்காத ஆளுங்க என்று சொன்னா அப்படி ஒருத்தரும் கிடையாது.இருந்தாலும் என்ன ஹுர்ட் பண்ணினவங்க என்று சொல்லும்போது ஏடிகே மற்றும்  அசீம் ரெண்டு பேரையும் 

சொல்லலாம்.


என்னுடைய குணாதிசயங்களுக்கு இதுதான் கிடைச்ச பரிசு என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன் .இதுக்கு மேல நான் நானா இல்லாம இருந்திருந்தா இப்ப வரைக்கும் வீட்டுல இருந்திருக்கலாம் .நான் நானா தான்  இவ்வளவு நாள் இருந்தன்,அதனால எனக்கு  இதற்கான இடம் இதுதான் அன்று அனுப்பப்பட்டு இருக்கு என்பதாக எடுத்துக் கொள்கிறேன்.

அசீம் நல்ல ஒரு பேச்சாளர் .அவருடைய பேச்சுத்திறமையால்  என்ன வேணும்னாலும் சாதிப்பார்.ஆனால் நிறைய விஷயங்களில்  தவறு விட்டு இருக்காங்க.அதை மட்டும் சரியாக பண்ணிருந்தா இன்னும் வேற மாதிரி இருந்திருக்கலாம்.

 ஏ டி கே அவர்கள் எதுவாக இருந்தாலும் நேரபேசி இருக்கலாம் .பின்னாடி பேசுறத கொஞ்சம் குறைச்சிருந்திருக்கலாம் .அப்படி இருந்திருந்தால் எனக்கு அவரை புரிஞ்சிருக்கிறதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும்.

விக்ரமனுக்கும்  எனக்கும் கொஞ்சம் லேட்டா தான் பழக்கமாச்சு ,பேசவே ரொம்ப லேட்டா தான் ஆரம்பிச்சோம் .அவங்களும் என்ன தவறா புரிஞ்சுக்கிட்டாங்க . குறிப்பிட்ட ஒரு சமயத்தில் இதுதான் நீங்க என்று என்னை புரிஞ்சுக்கிட்டாரு .எனக்கு ரொம்ப ஹப்பி .எல்லாமே அவங்க மிக்ஸ்ட்  என்று சொல்லாம் .



ராபர்ட் மாஸ்டர் அவர் கடந்து வந்த பாதையில அவங்க அப்படித்தான் என்று நான் கொஞ்ச நாளுக்கு அப்புறம் தான் புரிஞ்சுகிட்டன் . ரொம்ப குழந்தைத்தனமான  பேர்ஸன்.நிறைய வாட்டி என்கிட்ட திட்டு வாங்கி இருக்காரு ,நிறைய வாட்டி அவரை மொறச்சிருக்கன்.அவங்க இருக்கிற வரைக்கும் அப்படியே தான் இருந்தாங்க .என்னை  கிண்டல் ,டோச்சர் பண்ணிட்டு  இருந்தாங்க ஆனா அது தான் அவங்க ஒரு குழந்தைத்தனம் இருக்கிற பெரியவர்.



மைனா என்னுடைய பத்து வருஷ பிரென்ட் முடிஞ்ச வரைக்கும் என்னபற்றி  தெரிஞ்ச ஒரு பிரெண்ட். கிட்டத்தட்ட ஒரு ஆறு வருஷத்துக்கு கிட்ட  ஹப் இருந்துச்சு அந்த விஷயங்களை வீட்டில ரொம்பவே ஷேர் பண்ணிகிட்டோம்.ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.

 கேமரா தான் இருக்கணும் நம்மள மக்கள் பார்த்துகிட்டு இருக்கணும் அப்படி இருக்காமல் நம்மளுடைய மனச்சாட்சிக்கு ஏத்தமாதிரி இருந்தாலே அது சூப்பர்.அப்படி என்கிறது என்னுடைய பாலிசி அதனால அப்படியே பிக்பாஸில் பொல்லொவ் பண்ணன் .அத எல்லோருமே புரிஞ்சிக்கிட்டிங்க.

இந்த மக்கள் ஸ்டார் என்பது நான் கீதாதேவியா  ஆக்ட் பண்ணும்போது எல்லாருமே சேர்ந்து ஒரு டைட்டில் கொடுத்தாங்க .அது இங்க இப்ப வெளியில இப்படி யூஸ் பண்ணுவாங்கன்னு நினைச்சு கூட பாக்கல ரொம்ப தேங்க்யூ கைஸ்.என்று கூறியிருந்தார்.


Advertisement

Advertisement