• Nov 14 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் மகளை சந்தித்த ராபர்ட் மாஸ்டர்-ரசிகர்கள் கேட்ட கேள்வி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 60 நாட்களை எட்டியுள்ள நிலையில், மிகவும் பரபரப்பான விவாதங்கள் மற்றும் சண்டைகளுக்கு நடுவே ஒளிபரப்பாகி வருகின்றது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஜிபி முத்து, சாந்தி, செரினா, அசல் கோளாறு, மகேஸ்வரி, நிவாஸினி, குயின்சி, ராபர்ட் மாஸ்டர், ஆகியோர்  வெளியேறியுள்ள நிலையில் இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேஷன் ஆக உள்ளதை கமல் ஹாசன் கடந்த வாரமே உறுதி செய்தார். 

எனவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறவுள்ள அந்த இரண்டு போட்டியாளர்கள் யார்.. யாராக இருக்கும்  என ரசிகர்கள் யுகங்களின் அடிப்படையில் கூறி வருகிறார்கள். எனினும் அந்த வகையில் இந்த வாரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் குறைவான ஓட்டுகளுடன் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகின்றது.

 சமீபத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் ஐ லவ் மை டாட்டர் என குறிப்பிட்ட குயின்சியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


ஏற்கனவே குயின்ஸி பிக்பாஸ் வீட்டை விட்டு சென்றதும், ராபர்ட் மாஸ்டரை தான் சந்திப்பேன் என கூறியிருந்த நிலையில் இவர்களுடைய இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அத்தோடு தன்னுடைய சொந்த மகளை ராபர்ட் மாஸ்டர் பார்க்கவில்லை என்றாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கு ஒரு மகள் கிடைத்ததை தெரிவிக்கும் விதமாக இந்த புகைப்படத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.

 

இருப்பினும் அவருடைய ரசிகர்கள், எப்போது உங்களுடைய சொந்த மகளை பார்க்கப் போகிறீர்கள் என  ரசிகர்கள் பலரும் தமது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.தத்தெடுத்த மகளுக்கே இவ்வளவு அன்பை கொடுக்கும் போது நிஜ மகளையும் நேரில் சென்று பாருங்கள் என கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.விரைவில் தன்னுடைய சொந்த மகளையும் ராபர்ட் மாஸ்டர் பார்ப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement