பிக்பாஸ் சீசன் 6ன் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரொபேர்ட் மாஸ்டர். இவர் சிறந்த ஒரு நடன இயக்குநர் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் நடிகை வனிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தமை நம் அனைவருக்கும் தெரியும். பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பிரிந்து விட்டனர்.
இதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரொபேர்ட் மாஸ்டர் அங்கு சக போட்டியாளரான ரச்சிதா மேல் காதல் வசப்பட்டதாக ஒரு சில கிசுகிசுக்கள் எழுந்தன.
பின்னர் சமீபகாலத்தில் வனிதாவுடன் ரொபேர்ட் மாஸ்டர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சந்தேகத்தை கிளப்பி இருந்தன.
இந்நிலையில் தற்போது ரொபேர்ட் மாஸ்டர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் "ஐ லவ் யூ டார்லிங்" எனக் குறிப்பிட்டு தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் நீங்க சொன்ன டார்லிங் யார் எனக் கேட்டு ஷாக் ஆகியுள்ளனர்.
Listen News!