• Sep 20 2024

ரோகினியால் விஜயாவுக்கு வந்த சோதனை.. மீனா கொடுத்த பதிலடி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

அந்தவகையில் விஜயாவும் பார்வதியும் கந்துவட்டி காரனை சந்திக்க வர அவர் எங்க உங்க பசங்க, உங்க கணவரை கூட்டிட்டு வர சொன்னேனே அவங்க வரலையா வெளியில இருக்காங்களா கூப்பிடுங்க என்று சொல்ல விஜயா இல்ல அவங்க வரல அவங்க எல்லாரும் வெளியூருக்கு போய் இருக்காங்க என்று ஒரு கதையை சொல்கிறார்.


பார்வதியும் ஆமா அவங்க எல்லாம் வெளியூருக்கு போய் இருக்காங்க சொத்துல எந்த பிரச்சனையும் வராது என்று சொல்ல சரி இந்த மாசத்துக்கான வட்டியை கொடுங்க என்று வட்டிக்காரன் கேட்கிறார் .கேட்டதும்... விஜயா 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுக்க.... வட்டியே 85 ஆயிரம் ரூபாய் இதிலேயே கம்மியா கொடுத்தா எப்படி ? உங்க பணத்தை எடுத்துட்டு போங்க இன்னும் மூணு நாள்ல 17 லட்சம் ரூபாயை வட்டியோடு கொடுத்துட்டு உங்க பத்திரத்தை வாங்கிட்டு போங்க என்று உறுதியாக சொல்கிறார்.


 இந்த ஒரே முறை மட்டும் பொறுத்துக்கோங்க கல்யாணத்தால பணத்தை கொடுக்க முடியல என்று விஜயா சொல்ல...அதற்கு ''அதை எல்லாம் ஏற்றுக்கொள்ள வட்டிக்காரர் மறுக்கிறார் . சரி வளையலை வச்சு பணத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறேன் என்று சொல்ல வளையலை கொடுங்க நாங்களும் வாங்கிப்போம் என்று சொல்லி வளையலை வாங்கி பணத்திற்காக கழித்துவிட்டு மீதியை கொடுத்து விடுகிறார்.


என்னுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டது என்று சொல்லி வருத்தப்படுகிறார் விஜயா.மீனாவை ராசி இல்லாதவனு சொன்னியே இப்ப ரோகிணி வந்த நேரம் உன் வளையல் போச்சு ஒருத்தர குறை சொல்றதால எதுவும் மாறாது எல்லாம் நம்ப நேரம் என்று பார்வதி.சொல்கிறார.

இந்நிலையில்  முத்து ஸ்டேஷனுக்கு சென்று சுதாகர் மேல் புகார் கொடுக்க போக அவர்கள் ஆதாரம் இல்லாமல் கைது செய்ய முடியாது என்று சொல்லி அனுப்பி விடுகின்றனர்.

 இங்கால ரோகினி மனோஜ்க்கு ஒரு வேலை பார்த்து சொல்ல மனோஜ் என்னுடைய படிப்பு தகுதிக்கு இதெல்லாம் எப்படி செய்ய முடியும் என்று சொல்ல கொஞ்ச நாளைக்கு இந்த வேலையை பாரு என்று உடன்பட வைக்கிறார்.

 பிறகு மனோஜ் எனக்கு ஒரு டீ கிடைக்குமா என்று கேட்க வெளியே வரும் ரோகிணி மீனாவிடம் டீ போட்டு தர சொல்லி கேட்க எனக்கு வேலை இருக்கு நீங்களே போட்டுக்கோங்க என்று சொல்லி உள்ளே செல்கிறார் .இதைப் பார்த்த விஜயா நீ உள்ள போ ரோகினி உனக்கு டீ வரும் என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டு மீனாவிடம் ஒரு டீ போட்டு கொடுத்தா குறைஞ்சா போயிடுவ என்று சண்டை போடுகிறார்.மீனாவும் தன்னை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறார்.


அவ பணக்கார வீட்டு பொண்ணு அவங்க வீட்ல இதெல்லாம் செய்வதற்கு பத்து ஆளுங்க இருப்பாங்க என்று விஜயா சொல்ல அதுல ஒரு ஆளு வந்து செய்ய சொல்லுங்க என்று மீனா கூறுகிறார்.


இதனிடையே  முத்து ரவியுடன் வந்து சிசிடிவி ஃபுட்டேஜ் =ஆ  சூப்பர் மார்க்கெட்டில்கேட்க அது டெலிட் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள் . அப்போது ரவி ஏற்கனவே இந்த விஷயம் தெரியும் என்ற உண்மையை உடைக்க முத்து கோபமாகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.இனி என்ன நடக்க இருக்கிறது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement