சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது கேரியரை தொடங்கியவர் வி.ஜே மணிமேகலை. அவர் அங்கு பல லைவ் ஷோக்களையும் , பிரபலங்களின் நேர்காணல்களை தொகுத்து வழங்கிய அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
சில வருடங்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்புகளை மீறி உசைன் என்ற நடன இயக்குனரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு மணிமேகலையின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததால் வேறு வழியின்றி நண்பர்கள் முன்னிலையில் இவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பின்னர் 2019 இல் விஜய் டிவி நடத்திய மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற மணிமேகலை மற்றும் அவரது கணவர் உசைனுக்கு வாய்ப்பு கிடைத்தது. உசைன் இயல்பில் நடன இயக்குநர் என்பதால் மணிமேகலைக்கு பிரச்சனை ஏதும் இல்லாமல் நடன முறைகளை அவரது கணவரே கற்று தந்து தன்னுடன் ஆட வைத்தார். அந்த நிகழ்ச்சி இவருக்கு நல்ல ஒரு வரவேற்பு கொடுத்தது.
தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று கோமாளியாக அசத்தி வருகின்றார். இந்நிலையில் தனது கணவர் உசைனுடன் மணிமேகலை திருப்பதி சென்றுள்ளார்.அந்த புகைப்படத்தை தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு ஹார்ட் எமோஜிஜை தெறிக்க விட்டு வருகின்றனர்.
பிற செய்திகள்
- விரைவில் உருவாகும் கைதி 2..இவர் தானா புதிய இசையமைப்பாளர்
- பிரபல இளம் நடிகர் புற்றுநோயால் திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- இந்த நடிகருடன் நடிப்பதே என்னுடைய ஆசை.. பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஓபன் டாக்
- லாகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன்- நியூ லுக்குடன் வெளியான ரிலீஸ் டேட் -குஷியில் ரசிகர்கள்..!
- அடுத்த சிவகார்த்திகேயன் இவர்தான்: நடிகர் பார்த்திபனே கூறிய விடயம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!