தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களாக திகழும் அத்தனை பேரும் கடந்து வந்த காலங்களை எடுத்து பார்த்தால் மிகவும் வேதனைக்குரிய ஒரு விடயமாகவே காணப்படும். அதற்கு காரணம் அவர்கள் கடின உழைப்பாலும், தமது விடாமுயற்சியாலும் தான் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பார்கள்.
அந்த வகையில் எல்லோருக்கும் ஒரு உதாரணமாக காணப்படுவோர் நடிகர் அஜித் மற்றும் ரஜினி. இவர்களுடைய ஆரம்ப கால வாழ்க்கை சாதாரண ஒரு தொழிலாளியாகவும் அதன் பின்பு தமது முயற்சியாலும் தமது உழைப்பாளும் படிப்படியாக முன்னேறி, இன்று உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு தல, சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்கள்.
அதேபோல தற்காலத்தில் இவர்களையும் விட மிகக் குறைந்த முயற்சியில் உழைத்து இருந்தாலும், குறுகிய காலத்தில் சிலர் நடிகர்களாக மாறிவிடுகிறார்கள்.
அதாவது தற்போது சமூக வலைத்தளங்களின் ஊடாக குறிப்பாக இன்ஸ்டாகிராம், யூடியூப், பேஸ்புக் போன்ற வலைத்தளங்கள் ஊடாக தம்மை பிரபலப்படுத்திய நபர்களுக்கும் சினிமா துறையில் வாய்ப்புக்கள் ஈசியாக கிடைத்து விடுகின்றன.
அதன்படி தற்போது கடந்த காலங்களில் கோமாளியாக பார்க்கப்பட்ட ஜி.பி முத்து, காத்துக் கருப்பு கலை போன்ற யூடியூப் பிரபலங்கள் தங்களாலும் சிறப்பாக நடிக்க முடியும், மக்களை மகிழ்விக்க முடியும் என சாதித்து காட்டியுள்ளார்கள்.
அது மட்டும் இன்றி விஜய் டிவியில் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஊடாக பல்வேறு கலைஞர்கள் தமது திறமை மூலம் தமக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது யூடியூப் மூலம் மக்களை மகிழ்வித்து வந்த காத்து கருப்பு கலை அண்மையில் ஹீரோவாக ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். அவருக்கு படக்குழுவினரிடம் இருந்தும் சிறப்பான பேட்டி கொடுக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து அந்த பேட்டி வைரலாக பலர் விமர்சித்தாலும் இன்னும் பலர் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள்.
அதேபோலத்தான் ஜி.பி முத்துவும் யூடியூப் மூலம் மக்களை மகிழ்வித்து, அதன் பின்பு பிக் பாஸ் அதன்பின்பு விஜய் டிவி நிகழ்ச்சிகள், ஒரு சில படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.
இவ்வாறு சமூக ஊடகங்களில் கோமாளிகளாக பார்க்கப்பட்ட இவர்களைப் போன்ற இன்னும் சிலர், தற்போது தமது திறமையின் அடிப்படையில் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
இதேவேளை, சினிமா வாய்ப்பை தேடி திறமை மிக்க எத்தனையோ பேர் போராடிக்கொண்டு இருக்கும் நிலையில், இவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட விடயமும் பேசுபொருளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!