• Nov 19 2024

ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆர் ஆர் ஆர் திரைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

1920 களில் ஐதராபாத்தில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படம் தான் ஆர்ஆர்ஆர். இப்படத்தில் முக்கிய வேடத்தில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு தியேட்டர்களில் 1200 கோடி வசூலை பெற்றது.அதைத் தொடர்ந்து ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஓடிடி.,யிலும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். வெளிநாடுகளிலும் ஆர்ஆர்ஆர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் 2023 ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் ஆர்ஆர்ஆர் படமும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறந்த சர்வதேச படத்திற்கான பிரிவில் இந்த படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் ஆர்ஆர்ஆர் படத்தில் ஆஸ்கர் விருது கிடைப்பதற்கான வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆர்ஆர்ஆர் தவிர, பிரான்ஸ் நாட்டின் 'Both Sides of the Blade', 'One Fine Morning', ஆஸ்திரியாவின் 'Corsage', கொரியாவின் 'Decision to Leave', டென்மார்க்கின் 'Holy Spider', பெல்ஜியத்தின் 'Tori and Lokita', பொலிவியாவின் 'Utama' போன்ற படங்களும் ஆஸ்கர் விருது போட்டியில் இடம்பெற்றுள்ளனவாம்.

ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தாலும், Danny Boyle இயக்கிய ஸ்லம்டாக் மில்லினர் படம் சிறந்த படம், சிறந்த டைரக்டர், சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட 8 பிரிவுகளில் ஆஸ்கர் விருதினை வென்றது. ஆனால் அது போல் ஆர்ஆர்ஆர் படம் ஏன் முக்கியமான பிரிவுகளின் கீழ் விருதுகளுக்காக பரிந்துரையில் இடம்பெறவில்லை என பல வெளிநாட்டு ஆஸ்கர் பரிந்துரையாளர்கள் கேள்வி எழுப்பி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக ஆர்ஆர்ஆர் படம் பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பப்பட்டால் ஆஸ்கர் விருது ரேசில் ஆர்ஆர்ஆர் இன்னும் முன்னேறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement