• Sep 21 2024

RRR நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் செலவு... சர்ச்சைக்கு முடிவுகட்டும் படக்குழு!

RRR
Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 95வது ஆஸ்கர் விழாவில் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றது.கோல்டன் குளோப் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வென்றிருந்த நாட்டு நாட்டு பாடல், தற்போது ஆஸ்கரையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறுஇருக்கையில், இந்தப் பாடலுக்கு ஆஸ்கர் விருது பெறுவதற்கு ராஜமெளலி 80 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள RRR படக்குழு செலவு செய்த விவரங்களையும் வெளியிட்டுள்ளதாம்.

95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வாரம் நடைபெற்றது.அத்தோடு இதில், ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் இந்த விருது கிடைத்தது. ஏற்கனவே கோல்டன் குளோப் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வென்ற இந்தப் பாடல், தற்போது ஆஸ்கரையும் வென்றது.

RRR படத்தின் இசையமைப்பாளர் MM கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் நாட்டு நாட்டு பாடலுக்கான ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர்.எனினும் இதனையடுத்து பிரதமர் மோடி முதல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் RRR படக்குழுவினருக்கு வாழ்த்து கூறியிருந்தனர். இதனிடையே RRR படக்குழு 80 கோடி ரூபாய் வரை பணம் செலவு செய்தே ஆஸ்கர் விருதை வென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இயக்குநர் ராஜமெளலி இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

முன்னதாக RRR படத்தை பாராட்டுவதற்காக ஹாலிவுட் இயகுக்குநர்கள் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் ஆகியோருக்கும் பணம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்கும் இயக்குநர் ராஜமெளலி மறுப்பு தெரிவித்தார். அத்தோடு ப்ரோமோஷன், விளம்பரங்களுக்கு பணம் செலவு செய்யப்பட்டிருக்கலாம், ஆனால் ஆஸ்கர் விருதை பணம் கொடுத்து வாங்க முடியாது என சினிமா ஆர்வலர்கள் கூறியிருந்தனர்.

இவ்வாறுஇருக்கையில், ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்க கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் இருவருக்கு மட்டுமே இலவச பாஸ் கொடுக்கப்பட்டது. ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் NTR ஆகியோர் தலா 20 லட்சம் கொடுத்துதான் விழாவுக்கு சென்றதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். ஆனால், ரசிகர்களோ ஆஸ்கர் விருது பெற எவ்வளவு பணம் செலவு செய்தார்கள் எனக் கேட்டால், நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து விளக்கம் கொடுத்துள்ளதாக விமர்சித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement