சமீபகாலமாக திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பிற்கு நிகராக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் கிடைத்து வருகின்றது.அதிலும் சன்டிவி, விஜய் டிவி, ஷு தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரிஆர்பியிலும் முன்னணியில் நிற்கின்றன.
பொதுவாக விஜய் டிவி சீரியல்களில் நடித்து வரும் பிரபலங்கள் இலகுவாக ரசிகர்களைக் கவர்ந்து விடுகின்றனர்.அத்தோடு இதில் புதுப்புது சீரியல்களும் ஆரம்பித்து வருகின்றன. அந்த வகையில் அண்மையில் ஆஹா கல்யாணம் மோதலும் காதலும் பொன்னி என புத்தம் புதிய சீரியல்கள் ஆரம்பித்து ஒளிபரப்பாகி வருகின்றது.
இப்படியான நிலையில் ராதிகாவேின் ராடன் தயாரிப்பு நிறுவத்தினால் தயாரிக்கப்படும் கிழக்கு வாசல் என்னும் சீரியல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த சீரியலின் ஷுட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஷுட்டிங்கில் ராதிகாவும் விஜய்யின் அப்பாவும் விஜய் குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!