• Nov 14 2024

வருத்தப்பட்டது உண்மை தான்: விஜய்யின் படம் குறித்து சாந்தனு விளக்கம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார் சாந்தனு பாக்யராஜ். அந்த படத்திற்கு பிறகு தன் கெரியர் வேற லெவலில் மாறப் போகிறது என பேட்டிகள் எல்லாம் கொடுத்தார். ஆனால் படத்தில் சில நிமிடங்களே வந்தார் சாந்தனு.

இவ்வாறுஇருக்கையில் தற்போது அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்த விஷயம் விஜயம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அந்த பேட்டியில் சாந்தனு பாக்யராஜ் கூறியிருப்பதாவது,

மாஸ்டர் மாதிரி ஒரு பெரிய படம் கிடைத்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது. என் கதாபாத்திரம் ரொம்ப நல்லா இருந்தது. விஜய்ணாவுடன் சேர்ந்து நடிக்க யார் தான் வேண்டாம் என சொல்வார்கள். விஜய்ணாவுடன் வரும் கதாபாத்திரம் அது.

30 நிமிடங்கள் வரும் கதாபாத்தாரம் என்னுடையது. ஆனால் படத்தில் 12 நிமிடங்கள் மட்டுமே வந்தது. அதை பார்த்தவர்களோ, பயங்கரமாக பேட்டி எல்லாம் கொடுத்தீங்க என கிண்டல் செய்யத் துவங்கினார்கள்.

மாஸ்டர் படத்தில் நான் எதிர்பார்த்தது ஒன்று, நடந்தது ஒன்று. என் நேரமா என்று தெரியவில்லை. அத்தோடு அந்த படத்திற்காக 30 நாட்கள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன். ஆனால் படத்தில் வெறும் 12 நிமிஷம் தான் வந்தேன். எனக்கென்று தனி யூனிட் கொடுத்திருந்தார்கள்.

எனக்கென்று தனி சண்டை காட்சி இருந்தது. காதல் பாடல் இருந்தது.மேலும்  ஒரு பாதி நாள் நானும், விஜய்ணாவும் ஒரு சண்டை காட்சியில் நடித்தோம். ஃபைனல் ஃபுட்டேஜில் அதெல்லாம் வரல. இது தெரிந்தால் நான் ஏன் அப்படி பேட்டி கொடுக்கப் போகிறேன் என்றார்.

அந்த பேட்டி வீடியோ வைரலானது.எனினும் அதை பார்த்த விஜய் ரசிகர்கள் எல்லாம் சாந்தனுவை திட்டத் துவங்கினார்கள். உங்களை யாரு ப்ரோ அவ்ளோ கஷ்டப்பட்டு விஜய்ணா படத்தில் நடிக்கச் சொன்னது. விஜய்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்லிவிட்டு, தற்போது அவர் படத்தையே குறை சொல்கிறீர்களே. உங்களின் கெரியர் எப்படி நன்றாக இருக்கும் என்றார்கள் விஜய் ரசிகர்கள்.தளபதியன்ஸ் தன்னை விளாசுவதை பார்த்த சாந்தனு ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அந்த பேட்டி வீடியோ ட்வீட்டிலேயே சாந்தனு தெரிவித்திருப்பதாவது...

வருத்தப்பட்டேன் உண்மை தான், விமர்சனம் ஃபேஸ் பண்ணினேன் உண்மை தான். ஆனால் நான் யாரையும் குறை சொல்லவில்லை. அந்த வீடியோவில் இருக்கும் விளக்கம் சிறிது வேறுமாதிரி இருக்கிறது. நாம் நினைப்பது போன்று அனைத்தும் இருப்பது இல்லை. ஆனால் இது ஒரு பாடம். மறக்க முடியாத அனுபவம் என கூறினார்.

சாந்தனுவின் விளக்கத்தை பார்த்த ஒருவரோ, ஆனால் விஜய்யும் நீங்களும் பாரலல் ஃபைட் சீக்வென்ஸ் பண்ணேனு சொன்னீங்க பாருங்க, யப்பா என சிரித்தார். அதை பார்த்த சாந்தனுவோ, ஷூட் பண்ணத தானே சொல்ல முடியும். அத நீங்க பார்க்கலனா நான் என்ன பண்ண முடியும் என்று பதில் அளித்தார்.

விஜய் ரசிகர்கள் தெரிவித்திருப்பதாவது,

உங்களின் வருத்தம் நியாயமானது தான் ப்ரோ. அந்த வீடியோவில் நீங்கள் பேசியதை எடிட் பண்ணி போட்டுட்டாங்க ப்ரோ. அதுக்கு எல்லாம் விளக்கம் அளித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.விமர்சகருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய லெஜண்ட் ஹீரோயின்: அஜித், விஜய், சூர்யா ரசிகர்கள் பாராட்டு

நீங்கள் ஒரு நல்ல நடிகர். உங்களுக்கு ஏற்ற வாய்ப்பு வரும். அதுவரை பொறுமையாக காத்திருங்கள். எல்லாம் சரியாகிவிடும். பாசிட்டிவாக இருக்கவும். அந்த வீடியோ வெளியிட்ட பக்கத்தை சேர்ந்தவர்களுக்கு விஜய்ணாவை பிடிக்காது. அதான் அப்படி ஒரு விளக்கம். அதுக்கு எல்லாம் நீங்கள் பதில் சொல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.




Advertisement

Advertisement