• Sep 20 2024

“சாய் பல்லவியின் மிகப் பெரிய ரசிகன் நான்“-பிரபல பாலிவூட் இயக்குநர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் நடிகையாக இருந்தாலும் தமிழில் சரியான படவாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சாய்பல்லவி. தனது இயல்பான நடிப்பினாலும் அழகினாலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகின்றார்.

அந்த வகையில் பிரபல நடிகரான ராணா ரகுபதியுடன் இணைந்து 'விராட பருவம்' என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முதல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த பாலிவூட் இயக்குநரான கரண் ஜோஹர் கூறியதாவது “இது மிகவும் அற்புதமாக உள்ளது ராணா. பார்க்கக் காத்திருக்கிறேன். நீங்கள் சூப்பராக இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

அத்தோடு சாய் பல்லவியின் மிகப் பெரிய ரசிகன் நான்,” எனக் குறிப்பிட்டுள்ளார். கரணின் பாராட்டுக்கு, “நீங்கள் மிகவும் அன்பாவனர் சார், தாழ்மையுடன் மிக்க நன்றி,” என சாய் பல்லவி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement