விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'. இந்த நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து விட்ட நிலையில் தற்போது 6 ஆவது சீசன் ஆரம்பிக்கப்பட உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை வந்த ஐந்து சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் என்றால் அது மூன்றாவது சீசன்தான். அதில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் தான் சாக்ஷி அகர்வால்.
இந்நிகழ்ச்சியில் இவர் எதிர்மறையான விமர்சனங்களையே ரசிகர்களிடமிருந்து அதிகமாகப் பெற்றிருந்தார். அதுமட்டுமல்லாது இவர் 'ராஜா ராணி' படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாகவும் நடித்தார்.
அதன்பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக வராமையினால் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் இவர் தற்போது சமூக வலைத்தளப் பக்கங்களின் வாயிலாக தனது பொழுதினைக் கழித்து வருகின்றார்.
அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி அதில் கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களினை பதிவிட்டு வருகின்றார்.
இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த சில இயக்குநர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது கூட ஒரு சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
சமீபத்தில் கூட சூடேற்றும் வகையில் இன்ஸ்டாகிராமில் சாக்க்ஷி அகர்வால் மாடர்ன் உடையில் அங்க அழகுகள் தெரிய புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு பாடலுக்கு பாவாடை, ப்ளவுஸ் அணிந்து குத்தாட்டம் போட்டிருக்கின்றார்.
அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகின்றது.
Listen News!