பிக் பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வால் தற்போது இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள நான் கடவுள் இல்லை என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் சாக்ஷி அகர்வாலை பாராட்டி வருகிறார்கள்.
நடிகை சாக்ஷி அகர்வால் படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், அடிக்கடி கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
தினம் தினம் வித்தியாசமான உடை அணிந்துகொண்டு அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அதனை தொடர்ந்து தற்போது அட்டகாசமான சேலையில் அம்சமாக போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படத்தில், சாக்ஷி அகர்வால் சிறிது கவர்ச்சியாக காட்சி அளிக்கிறார். மேலும், இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையில், சாக்ஷி அகர்வால் தற்போது புரவி, ஆயிரம் ஜென்மங்கள், குறுக்கு வழி, ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!