• Nov 19 2024

விக்ரம் படத்தில் நடிகர்களின் சம்பள விபரம்.. கமலுக்கு மட்டும் இத்தனை கோடியா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் விக்ரம். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து கமலின் படம் வெளியாவதால் ரசிகர்கள் முதல் சினிமா வட்டாரங்கள் வரை அனைவரும் ஆவலாக இருக்கின்றனர்.

இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.விஜய் சேதுபதி ,பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.

கமலஹாசனே தயாரித்திருக்கும் விக்ரம் படத்தில் நடித்ததற்காக கமல் 50 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். 118 நாட்கள் நடத்தப்பட்ட விக்ரம் படப்பிடிப்பில் கமலஹாசன் மட்டும் 60 நாட்கள் கலந்து கொண்டிருக்கிறார்.

மேலும் அடுத்தபடியாக விஜய் சேதுபதிக்கு 10 கோடியும், பகத் பாசிலுக்கு 4 கோடியும் விக்ரம் படத்திற்காக சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. விக்ரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் 4 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தன்னுடைய முதல் படமான கைதி படத்தில் 30 லட்சம் மட்டுமே சம்பளமாக வாங்கியவர்.

எனினும் அதைத் தொடர்ந்து இவருடைய இரண்டாவது படமே தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியதால் அந்த படத்திற்காக ஒன்றரை கோடி அவருடைய சம்பளமாம். சினிமாவில் அசுர வளர்ச்சியில் இருக்கும் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய கனவு நாயகனாக உலக நாயகன் கமலஹாசனை வைத்து தன்னுடைய மூன்றாவது படமான விக்ரம் படத்தை இயக்கி இந்த படத்திற்கு மட்டும் இவர் 8 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

மற்ற நடிகர் நடிகைகளுக்கும், விக்ரம் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் 4 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு ஆக மொத்தம் 80 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இதுவரை கமலஹாசன் நடிப்பில் வெளியான 150 திரைப்படங்களைக் காட்டிலும் பாக்ஸ் ஆபீஸில் நிச்சயம் வசூல் சாதனை குவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய லோகேஷ் கனகராஜ், இவருடைய அடுத்த படமாக தளபதியின் 67-வது படத்தை பக்கா மாஸ் திரைப்படமாக எடுக்க காத்திருக்கிறார். இந்தப்படத்தில் லோகேஷ் கனகராஜ் நிச்சயம் 8 கோடிக்கு மேல் சம்பளம் கேட்பார்.

Advertisement

Advertisement